Monday 13th of May 2024 07:30:17 PM GMT

LANGUAGE - TAMIL
கனடா கூட்டாட்சித் தேர்தல் சமிக்ஞை! முளைக்கும் தெருவோர விளம்பரங்கள் !!

கனடா கூட்டாட்சித் தேர்தல் சமிக்ஞை! முளைக்கும் தெருவோர விளம்பரங்கள் !!


கனடாவில் கூட்டாட்சித் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் ஒட்டாவாவில் தேர்தல் அறிகூறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

கனடாவில் கூட்டாட்சித் தேர்தல் ஒக்டோபர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஒட்டாவாவின் சட்டவிதிகளின் பிரகாரம் தேர்தல் நாளுக்கு 60 நாட்களுக்கு முன்னர் தனியார் சொத்துக்களில் தேர்தல் பிரசார விளம்பரங்களைக் காட்ட குடியிருப்பாளர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

தேர்தல் விளம்பரங்களைக் காட்சிப்படுத்த விசேட அனுமதிகள் எவையும் தேவையில்லை. ஆனால் அவை வாகன ஓட்டிகள், சைக்கிள் ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

எனினும் வாக்களிப்பு நாளுக்கு 30 நாட்களுக்கு முன்னர் தேர்தல் விளம்பரங்களை பொதுச் இடங்களில் காட்சிப்படுத்த முடியாது. வாக்கெடுப்புகள் முடிந்த 48 மணி நேரத்திற்குள் அனைத்து தேர்தல் விளம்பரங்களும் அகற்றப்பட வேண்டும் என்பதும் நிபந்தனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE